Tuesday, 17 May 2022

"கட்டுமான விரிசல்களை தடுக்கும் நவீன முறை" EPOXY INJECTION METHOD (வேதிப்பொருட்கள் கலந்த பிசின் கலவையை செலுத்தும் முறை)

Description: Related image



"கட்டுமான  விரிசல்களை தடுக்கும் நவீன முறை" EPOXY INJECTION METHOD (வேதிப்பொருட்கள் கலந்த பிசின் கலவையை செலுத்தும் முறை)
நமது முன்னோர்களால்  கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும் அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். நம் செட்டிநாட்டு வீடுகள் வெயிலுக்கும் மழைக்கும் ஏற்றவாறு கட்டப்படிருக்க கூடியவை. வீட்டினுள் எப்போதும் ஒரு குளுமை .இருக்கும். சுவர்களில் சிமிண்டுடன் முட்டை கலந்து பூசப்பட்டிருக்கும்.இதனால் சுவர்கள் மிக வழவழப்பாக இருக்கும். இவ்வளவு பாரம்பரியமிக்க நமது நகரத்தார் கட்டிடங்களை பாதுகாப்பது நமது கடமை தானே.
கட்டுமானங்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துபவை விரிசல்கள். சுவர்களிலும், அஸ்திவார பகுதிகளிலும் இவை ஆக்கிரமித்து கட்டுமானத்தை ஆட்டம்காண  செய்துவிடுகின்றன. பொதுவாக விரிசல்கள் ஏற்படுவதற்கு வீடுகளின் அருகில் இருக்கும் மரங்கள், ஈரத்தன்மையான நிலப்பரப்புகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
தற்போது கட்டுமானத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுவரும் வேலையில் விரிசல்களை சரிசெய்யும் முறையும் மாறுபட்டுள்ளது. விரிசல்கள் வீட்டின் தாங்குத்திறனை உருக்குலைக்க கூடியவை. சுவர்களையும், அஸ்திவாரங்களையும் நிலைகுலைய செய்யும் விரிசல்களை "வேதிப்பொருட்கள் கலந்த பிசின் கலவையை செலுத்தும் முறை மூலம் கான்கிரிட் கட்டிடங்களில் விரிசல்களை சீர்செய ".
Description: Related imageவேதிப்பொருட்கள் கலந்த பிசின் கலவை கொண்டு கட்டுமானத்தில் ஏற்படும் விரிசல்களில் இருந்து கான்கிரீட் கட்டமைப்பை மீட்க பயன்படுத்தும் முறையே EPOXY INJECTION METHOD (EIM) ஆகும். பிசினின் (EPOXY RESIN) பண்புகள் கட்டிடத்தின் விரிசல்களை சீர்செய்ய நம்பகத்தன்மையுடன் உள்ளன என்பது  2011 ம்  ஆண்டில் ஆய்வில் தெளிவானது. குறிப்பிட்ட மூன்று விதமான பிசின்கள் பயன்படுத்துகின்றன. வலுவிழந்த கான்கிரீட் பீம்களில் ஏற்படும் விரிசல்கள் , இணைப்புகளில் ஏற்படும் விரிசல்கள்என மோசமான பாதிப்புகளால்  ஏற்படக்கூடிய விரிசல்கள் கூட இந்த முறையின்முலம் சீர்செய்ய இயலும் தற்பொழுது இந்த முறையானது மேல்பூச்சு, இணைப்பகுதி, வார்ப்புகள் (Casting)போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை மிகவும் துரிதமாக விரிசலை அடைக்கும் முறையாகும் .





இவை இரண்டு முறைகளில் செயல் படுத்தப்படுகின்றன அவை ,
  1. வேதிப்பொருட்கள் கலந்த பிசின் உட்செலுத்தும் முறை (Injection Method)
  2. வேதிப்பொருளை புவியீர்ப்பு மூலம் நிறப்புமுறை (Gravity filling)             
Description: Related imageDescription: Related image
Description: Image result for epoxy injection method figures
EPOXY INJECTION METHOD
இந்த முறையில் வேதிப்பொருட்கள் கலந்த கலவை செலுத்தப்பட்ட பிறகு கட்டிட அமைப்பானது மிகுந்த இழுவிசை  சக்தியுடணும்(High Tensile Strength), மற்றும் அதிக அழுத்த விசையுடனும்(High Compressive Strength) இருக்கிறது.
   Description: C:\Users\PLS\Desktop\aswinPLS\aswin\aswinPLS\Er.aswinPLS\02.jpg
சுப .அஸ்வின்பழனியப்பன் (M.E.,* STRUCTURAL ENGINEERING)
            www.civilbaselife.blogspot.in

No comments:

Post a Comment